jump to navigation

புத்தாண்டு பார்வைகள் ஜனவரி 1, 2008

Posted by M Sheik Uduman Ali in Articles.
trackback

முதலில் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இந்த புத்தாண்டில் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இந்த புத்தாண்டில் எனது பிரார்த்தனைகள்:

 • சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும்.
 • தீவிரவாதம், மதம் என்ற பெயரில் வலியோன் எளியோனை நசுக்கும் கொடுமைகள் ஓய்ந்திட வேண்டும்.
 • வகுப்புவாதம், இனப்படுகொலைகள் மடிந்திட வேண்டும்.
 • அன்பும் அறமும் நிலைத்திட வேண்டும்.
 • இல்லறம் தழைத்திட வேண்டும். எந்திரமயமாக்கலிலிருந்தும், டிவிப் பெட்டியிலிருந்தும் அது விடுபட வேண்டும்.
 • ஓட்டிற்காக பிறருக்கு கொடுக்கப்படும் சலுகைகள், தள்ளுபடிகளுக்காக, புதிய வரித் திணிப்புகள் நம் தலையில் ஏறாமல் இருக்க வேண்டும்.
 • செய்கின்ற தொழில், வேலை மேம்பெற்றிட வேண்டும். அதை செவ்வன செய்து முடித்திடும் திறமை வேண்டும்.
 • கொடி நோய்களுக்கான மருத்துவக் கண்டுபிடிப்புகள் வெற்றி பெற வேண்டும். அது வறியவனுக்கும் வசப்பட வேண்டும்.
 • கல்வியும், மருத்துவமும் வியாபாரமயமாக்கப்படுவது மறைந்திட வேண்டும்.
 • மதங்கள் பரப்புவதை நிறுத்தி மனிதம் பரப்புவோம்.
 • திருமணம் ஏங்கி நிற்கும் கன்னிப் பெண்கள், குழந்தைகள் ஏங்கி நிற்கும் பெண்களுக்கு இறைவன் வழி செய்திட வேண்டும்.

எனது பார்வைகள்:

சம்பிரதாயத்திற்காக எல்லாரையும் போல நானும் எனது பார்வைகளை இங்கு வழங்கியுள்ளேன். கண்டுக்காதவர்கள் தொடர்க; தகுதி தராதரம் பார்ப்பவர்களுக்கு எனது டிஸ்கிளைமர்: தயவு செய்து எனது அடுத்த சினிமா விமர்சனத்திற்கோ அல்லது கட்டுரைக்கோ காத்திருக்கவும்.

ஏராளமான வாழ்த்து SMSகள், emailகள், ராசிபலன்கள் மற்றும் வேண்டுதல்களோடு மற்றுமொரு புத்தாண்டாக மலர்ந்திருக்கிறது 2008. சில துறைகள் வலிமையடைந்துள்ளன; சிலவை லேசாக நலிந்துள்ளன. ஆனால் பொருளாதாரத்தை பொறுத்தவரை 2007 சிறப்பாக இருந்தது. இதற்கு மத்திய அரசும் ஒரு காரணம்.

வேலைவாய்ப்பை பொறுத்தவரை எல்லா துறைகளிலும் நிறைய தேவைகள் இருந்தும்; புதியவர்களுக்கான வாய்ப்புகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதற்கு கார்ப்பெரட் HRகளின் நேர்மையும்(?) ஒரு காரணமாக இருக்கலாம். தனியார் துறைகளிலும் திறமை மட்டும் வேலை செய்வதில்லை. சீரியஸான இன்னொரு செய்தி: வாங்கும் சம்பளத்திற்கு தகுந்த திறமை பணியாட்களிடம் குறைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உஷார்.

ஏகமாக இந்த ஆண்டும் நசுக்கப்பட்ட ஒரு துறை விவசாயம். அமெரிக்க நச்சு விதைகள், விஷ உரங்கள் என ஏகப்பட்ட குளறுபடிகள். இயற்கை உரங்களும் ஏராளமான வழிமுறைகளும் இருந்தும் மேல்நாடுகளின் சோதனைக் களமாக உள்ளது நம் பூமி. ஆனால் தமிழ்நாட்டில் விவாசாயி மட்டுமன்றி, அனைவருக்கும் ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி நவீனப்படுத்த முயற்சி செய்யும் விகடனின் பசுமை விகடன் இதழின் முயற்சிக்கு பாராட்டுகள். இன்னொரு கேள்வி: அடுத்த தலைமுறைக்கு விவசாயம் என்று காட்ட ஏதாவது இருக்குமா? அடுத்த தலைமுறையில் யார் விவசாயியாக இருப்பார்கள்?. தவிர, ஓரளவிற்கு எல்லா நஞ்சை நிலங்களும், குளம் ஏரிகளும் ரியல் எஸ்டேட் துறைக்கு தாரை வார்க்கப்பட்டது.

கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதோ இல்லையோ, அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு நர்சரி ஸ்கூலை நடத்தும் முதலாளியின் (ஸாரி நிர்வாகியின்) பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்துள்ளது. கற்றலின் வழிமுறைகளை நவீனப்படுத்த யாரும் தயாரக இல்லை. எப்பவும் போல், கற்ப்பிப்பவர்களை போல ஒரு சொகுசு வாழ்க்கைக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். போதாதென்று வரும் வருடம் இவர்களுக்கு திட்டக் கமிஷனின் பரிந்ததுரை படி சாப்ட்வேர் துறைக்கு நிகராக சம்பள உயர்விற்கு வேறு வாய்ப்புள்ளதாம். ஆண்டவா! நல்லாசியர்களை கொடு என்று கேட்பதை விட வேறு வழியில்லை.

மருத்துவம் ஏராளமான முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது. ஆனால் கிட்னி வியாபாரமும், வியாதிக்காரர்களின் நிலைமை தெரிந்து காசு பிடுங்கும் கலாச்சாரமும் பயமுறுத்துகின்றன. இதையும் தாண்டி விட்டால் பல ஆயிரங்களை அடிக்கும் வாய்ப்பு இருந்தும் தெளிவான, உண்மையான வழிகள் சொல்லும் சில மருத்துவர்களை சிலரின் தயவால் காண அல்லது கேட்க நேரிட்டது மகிழ்ச்சியான விசயம்.

அரசியலை பொறுத்த வரை எதிர்பார்த்தது போலவே கடந்த வருடம் குஜராத் தேர்தல் முடிவுகள். மோடி ஜெயித்தது ஒன்றும் அதிர்ச்சியானது அல்ல. முதல் காரணம், அந்த மண்ணும் மக்களும். இரண்டாவது அங்குள்ள மதவாத அரசியல். மண்ணையும் மக்களையும் பொறுத்தவரை பெரும்பாண்மை மக்களுக்கு தன் பக்கத்து வீட்டுக்காரன் பிற மதத்தவனாக இருப்பது வெறுப்பிற்குரியது என்ற அவர்களின் வெளிப்படையான கருத்து. மாநிலத்தின் உட்கட்டமைப்பை நன்றாக்கி, அடிப்படை வசதிகளை பெருக்கி, வரி வட்டி என மக்களை சுமைதாங்கியாக்காமல் மோடி ஆட்சி நடத்திய விதம். மதவாத அரசியலை பொறுத்தவரை குஜராத் ஹிந்துத்துவாவின் சோதனைச்சாலை. அங்கு எந்த கட்சியாலும் ஹிந்துத்துவா இல்லாத மதச்சார்பற்ற அரசியலை நடத்துவது கடினம்.

ஆனால் இதுதான் எதிர்கால இந்தியாவின் இறையாண்மை மாதிரியா? மதச்சார்பற்ற வேண்டாம், மனிதாபிமானமில்லாத ஒரு கட்சி அதை விட மோசமான ஒரு தலைவரை மக்கள் கொண்டாடுவது சோகமான ஜனநாயகத்தின் முன்மாதிரி.

எல்லாத் துறைகளை விடவும் கடந்த வருடம் செம சிக்ஸர் அடித்த துறை, சினிமா. குறிப்பாக தமிழ் சினிமா. எதிர்பார்த்த சினிமாக்கள் தோற்றன; எதிர்பாராத சினிமாக்கள் வென்றன என்ற லாஜிக் 2007க்கு பொருந்தாது. வேண்டுமென்றால் எதிர்பார்த்த மாதிரி இல்லாதிருந்த சினிமாக்கள் உண்டு. கடந்த வருடம் ஜெயித்த சினிமாக்களையும் அவைகளுக்கான விமர்சனங்களையும் எடுத்துப்பார்த்தால் ஒன்று தெரிகிறது. தொழில்நுட்பத்திலும் திரைக்கதையிலும் நேர்த்தியான சினிமாக்கள் ஒரு வகை; எந்த பிரம்மாண்டத்தையும் கையிலெடுக்காமல் அசலான திரைக்கதையோட்டத்தை சொல்லியவை ஒரு வகை.

சினிமா பலம் பலவீனம் கருத்து
போக்கிரி விஜய்

அக்மார்க் கரம் மசாலா

தெலுங்கில் மகேஷ்பாபு பண்ணிய மேனரிசத்தை அப்படியே பிரதிபலித்த்து வரம்புக்குள் சிக்காத மாஸ் ஹீரோ சினிமா. பிரபுதேவாவிற்க்கு நல்ல என்ட்ரி கொடுத்த்து.
பருத்தி வீரன் வலுவான திரைக்கதை,

அசலான வசனங்கள்

டைரக் ஷன்

குறிப்பாக ஏதுமில்லை பாரதிராஜாவின் “16 வயதினிலேக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு இன்னுமொரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
மொழி கவித்துவமான திரைக்கதை,

ஜோதிகா,

இயக்கம்

குறிப்பாக ஏதுமில்லை எந்த மின்மினுப்புகளும் இல்லாமல் எல்லோரையும் உருக வைத்த சினிமா.
சென்னை 6000028 திரைக்கதை,

மாறுபட்ட கதைக்களம்

நடிப்பு

இசை

குறிப்பாக ஏதுமில்லை சிம்பிள் & பவர்புல் சினிமா
சிவாஜி ரஜினி,

இசை

தொழில்நுட்பம்

திரைக்கதை தமிழ் சினிமா வர்த்தகத்தை உலகமயமாக்கியது.
பொல்லாதவன் தனுஷ்,

மாறுபட்ட கதைக்களம்

காட்சியமைப்புகள்

பல பாணிகளில் கதை சொல்ல முனைந்தது அசத்தலான, மாறுபட்ட கதையம்சத்துடனான சினிமா
கல்லூரி இலக்கியம் பேசும் திரைக்கதை,

நடிகர்கள்

முடிவு இலக்கியத் தரமான சினிமா
ஓரம் போ* திரைக்கதை,

டைரக் ஷன்

எவனோ ஒருவன்*
ஒன்பது ரூபாய் நோட்டு *
பில்லா தொழில் நுட்பம்

அஜீத்

திரைக்கதையுடன் தொழில் நுட்பத்தை இணைக்கத் தவறியதில் தமிழின் முதல் ஹாலிவுட் பாணி ஸ்டைலிஷ் ஆக்ஷென் சினிமா
 • இப்படங்களை பார்க்கவில்லை.

சின்னத்திரையை பொறுத்தவரை சின்னத்திரை கலைஞர்கள் மிகப்பெரும் சிலிப்பிரட்டிக்களாக மாறியிருக்கிறார்கள். இந்த மாற்றம் மட்டுமில்லை. ரியாலிட்டி ஷோ, தொடர் நாடகம், நக்கல், நையாண்டி என அழுகையும் அழுக்குமாக மெகாத்தொடர்களையும், சினிமாவையும் நம்பி இருந்த தமிழ் சேனல்களின் தூக்கத்தை கலைத்து சின்னத்திரையில் வலிமையான் இடத்தை பிடித்துள்ளது “விஜய் டிவி. மற்ற சானல்கள் இதன் நிகழ்ச்சிகளை காப்பியடிக்கும் நேரத்தில் இன்னொரு வகை புரோகிராமை கையிலெடுத்து ஆட்டம் காண வைக்கிறார்கள். கிரியேட்டிவிட்டி மட்டுமில்லாமல் டெக்னாலஜியை கையாளும் விதம், நிகழ்ச்சிகளை வழங்கும் தரம் இதன் வெற்றிக்கு மூலம்.

அப்புறம், புத்தாண்டு அன்று சானல் உலா சென்றதில் பளிச் என்று அசர வைத்தது ஜெயா டிவியில் அஜீத்தின் பேட்டி. அவர் பேசிய ஸ்டைல், தொட்ட ஆழம், பதிலளிக்கும் பக்குவம் என அட்டகாசமாக ஜொலித்தார்.

வருவோம்ல.

பின்னூட்டங்கள்»

1. Raja Narayanan N - ஜனவரி 2, 2008

Great visions on new year 2008, it shows your (Sheik Uduman Ali) another dimention of face…

Carry on…

2. Athipathy - ஜனவரி 3, 2008

Hi Sheik,
Once again excellent kattorai from you.

கலக்கி புட்ட தலைவா,

i wish all your believes comes true in this new year.

ஏனக்கு மிக மிக மிக‌ பிடித்த சில வரிகல் இதொ :::

ஏகமாக இந்த ஆண்டும் நசுக்கப்பட்ட ஒரு துறை விவசாயம்

ஆனால் தமிழ்நாட்டில் விவாசாயி மட்டுமன்றி, அனைவருக்கும் ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி நவீனப்படுத்த முயற்சி செய்யும் விகடனின் பசுமை விகடன் இதழின் முயற்சிக்கு பாராட்டுகள். இன்னொரு கேள்வி: அடுத்த தலைமுறைக்கு விவசாயம் என்று காட்ட ஏதாவது இருக்குமா?

—–எனக்கு கூடா இதெய் டொஉப்ட் தான் கீது

சினிமாவையும் நம்பி இருந்த தமிழ் சேனல்களின் தூக்கத்தை கலைத்து சின்னத்திரையில் வலிமையான் இடத்தை பிடித்துள்ளது “விஜய் டிவி“. மற்ற சானல்கள் இதன் நிகழ்ச்சிகளை காப்பியடிக்கும் நேரத்தில் இன்னொரு வகை புரோகிராமை கையிலெடுத்து ஆட்டம் காண வைக்கிறார்கள்.

——சொக்கஆ சொன்ன பா..சன் TV எல்லஆம் டரியல் தான்

finallஅ நன் ஒன்னு சோல்ல நேனைகிரஎன் தலைவஆ விஜய் TV நியyaa நானஅ new year episode superpa….அஹா அருமை கோபி நஆத் ..னே என்கையொஇ புட்ட்பா

lastta ennum onnu..sidela sindhu padittingale thailava ” தயவு செய்து எனது அடுத்த சினிமா விமர்சனத்திற்கோ அல்லது கட்டுரைக்கோ காத்திருக்கவும்.”…adhuvum super thaenpa…..

See you in your next topic

வனக்கம் நன்ரீ

அதிபதி

3. M Sheik Uduman Ali - ஜனவரி 3, 2008

Thanks aathi for your detailed reply.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: