jump to navigation

அல்லாஹ் ரக்க ரஹ்மான் மார்ச் 1, 2009

Posted by M Sheik Uduman Ali in கட்டுரைகள்.
Tags: , , ,
trackback

“அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையே அன்பை தேர்ந்தெடுத்தேன்என்ற உன்னதமான வரிகளால் தனது வாழ்வியலின் வெற்றியை தனக்கே உரிய தன்னடக்கத்துடன் ஆஸ்கர் விழாவில் தெரிவித்தார் அல்லாஹ் ரக்க ரஹ்மான். தன்னம்பிக்கை, உழைப்பு, முயற்சி என வெற்றிக்கு ஒன்றாம் வகுப்பிலிருந்தே நமக்கு தெரிந்த வழக்கமான வழிமுறைகளை எந்தவொரு வெற்றியாளரின் வாழ்விலும் எளிதாக பொருத்தி பார்க்கலாம். விசயம் அதுவல்ல. தனித்தன்மையான சில பண்புகள் தான் இந்த பொதுவான காரணிகள் வெற்றியாளர்கள் வசப்படும் காந்தங்களாக இருக்கும். அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான், சுழியில் ஆரம்பித்து ஆழி சூழ் உலகை ஆட்கொண்ட இளைஞன். இந்தியாவின் இசை மேஸ்ட்ரோ.

உலகாளவிய வெற்றி பயணத்திற்கான ஏ.ஆர்.ரஹ்மானின் வழிமுறைகள் வெற்றி பெற நினைப்பவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடங்கள். “வெற்றியும் புகழும் கோப்பையில் இருக்கும் காபி போல, இருப்பதை காலி செய்தால் தான் புதியதை ஊற்ற முடியும் என்ற சூஃபியிஸ கோட்பாட்டை ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றிகரமாக செயல்படுத்தி எந்தவொரு வெற்றியையும் தலைக்கு ஏற்றாமல் “எல்லா புகழும் இறைவனுக்கே என்ற அர்பணித்தலுடன் தன் வெற்றியை கொண்டாடி விட்டு புதியன கற்கவும்; செய்திடவும் முடிந்தது.

arr_oscar
“தாமரை இலை தண்ணீர் போன்றே இவ்வாழ்வை வாழ்வதாககூறும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒன்றும் சாமியார் அல்ல. நேர்மையான சாமர்த்தியசாலி. தைரியசாலி. ஆமாம், ஃப்யூசன் என்பது ஏதோ தீட்டு போல பாவித்து குறை கூறி வந்த கட்டுப்பெட்டிகள் மத்தியில் நாட்டுபுறம், கர்நாடிக், ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன், அராபிக், கவ்வாலி என ஏ.ஆர்.ரஹ்மான் பயணித்த தளங்களும் ஏற்படுத்திய ஃப்யூசன்களும் ஒரு பக்கம் என்றால், அவரது இசைக் கோவை இன்னொரு பக்கம் அவரது இசை பரவலுக்கு மூலங்களாக அமைந்தது. எழுதிக் கொள்ளுங்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கோவை அவரை இன்னும் உயர அழைத்துச் செல்லும்.

விமர்சனங்களை கண்டு உணர்ச்சி வசப்படாதவர் ஏ.ஆர்.ரஹ்மான். இங்கே இசை மேதைகள் என தங்களை தாங்களே போற்றிக் கொள்பவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி அடித்த கமென்டுகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரே பதில் “அது அவரது சொந்த கருத்து என்பது. உண்மையான பதில் அவரது வெற்றியில் இருக்கும்.

உலகின் மதிப்பு மிகுந்த ஒரு விழாவில் ஒன்றல்ல இரண்டு விருதுகள் வென்ற பிறகு புகழை இறைவனுக்கும், வெற்றியை அம்மாவிற்கும், பெருமையை தாய் மொழிக்கும் அர்பணித்த போது தான் உண்மையிலேயே மயிர் கூச்செரிந்தது; ஆனந்த கண்ணீரும் முளைத்தது. ஏதோ இத்தனை காலம் நாம் உழைத்து வாங்கியது போன்ற உணர்வு.

பதினேழு வருடங்களாக இந்த இளைஞனின் வெற்றி பயணத்தில் எனக்கான இன்ஸ்பிரேஷன் அவரது விருதுகளில் அல்ல; அவரது உழைப்பின் வெளிப்பாடுகளில். உழைப்பு மட்டுமல்ல; அதை சமர்பிக்கும் சாமர்த்தியமும் சேர்த்து தான் கோடம்பாக்கத்திலிருந்தவரை ஹாலிவுட்டிற்கு அழைத்து சென்றிருக்கின்றது. வசதியான வாய்ப்பிற்காக காத்திருக்காமல் வந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜெயிக்கிற ஃபார்முலா ஏ.ஆர்.ரஹ்மானுடையது.

அப்புறம் “ஈகோ. எல்லோருடைய உழைப்பையும் அங்கீகரிக்கும் மாண்பும், சம கால கலைஞர்களை பாராட்டும் பெருந்தன்மையும் “நிறைகுடங்களுக்கு மட்டும் உண்டான குணம். சாதாரண அங்கீகாரத்திற்கெல்லாம் “ஈகோ பிடித்து அழையும் மனிதர்களுக்கு மத்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

இதையெல்லாம் தாண்டி, ஆன்மிகத்தையும் நாட்டு பற்றையும் இவர் அணுகும் முறை. மற்றவர்களை போல சித்தாதங்கள் பேசியோ, இன, மத, மொழி பற்றி உருகியோ வழியாமல் கம்பீரமாக தன் நம்பிக்கையை பறைசாற்றும் விதம் ஒவ்வொரு இளைஞனும் பின்பற்ற வேண்டிய ஒன்று.
வீண் பெருமைகள் பேசி, எளிதில் எதற்கும் உணர்ச்சி வசப்படும் கோழைகளாய் இருப்பதனால் திறமைகள் இருந்தும் புழுதியில் வீழ்ந்து கிடக்கும் நம் மக்கள் பலருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறந்த வழிகாட்டி.

ஏ.ஆர்.ரஹ்மான் – இந்தியாவின் இன்ஸ்பிரேஷன்

பின்னூட்டங்கள்»

1. ந. வெண்ணிமாலை - மார்ச் 5, 2009

முதல் முறையாக தங்களின் இணையத்துக்குள் எனது விளக்கக்-
குறிப்பு ஒன்றை பதிவு செய்கிறேன்.
முத்தான மணித்துளிகளாய் எண்ணஉதயங்கள், வாசகங்கள்,
வாக்கியங்கள், விமர்சனங்கள், எழுத்துக்கோர்வை, மெய்யாகவே
மெய்சிலிர்க்கும் எளியநடை மொழி ஆளுமை – எனக்கு தெரிந்த
நெல்லை முதுநிலைக்கல்லூரி உதுமான் இன்று தொலைதூரம்
பயணித்து வந்தபின்பும் அதே அமைதியுடன், தொழில்நுட்ப
வளர்ச்சிகளையும் விடாது அறிவிற்குள் பொதித்து அதற்கென தனி
இணையதளமும் தொடங்கி, நல்லதொரு ‘Technolinguistic’
ஆக உருவாகியிருக்கும் இந்தசமயத்தில், தங்களின் ‘முன்னாள்
வகுப்புத்தோழன் நான்’ என்று பெருமிதத்தோடு
வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன்!!

திரைவிமர்சனமாகட்டும், செல்ஃபோனாகட்டும் அழகான எளிய தமிழ் ஆழ்கடலில் முத்தெடுத்து அத்தோடு நிற்காமல், முடியும்வரை மூழ்கி தரைதொட்டு, கரைகாணவும் விழையும் தாகத்திற்கு அடியேனது பணிவான வணக்கங்கள்!! தங்களது வருஙகால முயற்ச்சிகளுக்கும் வாழ்த்துக்கள்!

நன்றி! ந. வெண்ணிமாலை


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: