What else? மொபைல் போன்கள் ஓகஸ்ட் 13, 2008
Posted by M Sheik Uduman Ali in கட்டுரைகள்.Tags: கொரியா போன், சைனா போன், மொபைல் போன், China Phone, Korea Phone
2 comments
கெட்டிக்காரன்: மச்சான், புது மொபைல் வாங்கியிருக்கேண்டா.
ஏமாளி: அட, சொல்லவே இல்லை. கேட்டிருந்தா நானும் ஏதாவது நல்ல மாடல் சொல்லியிருப்பேன்ல.
கெட்டிக்காரன்: அட, போ மச்சி, அவனவன் டூத்பேஸ்ட் வாங்குற மாதிரி போய் வாங்கிட்டு வர்றான். இதோ பாரு, மேட் இன் சைனா.
ஏமாளி: என்ன சைனா பீஸா? ஏன்டா அதப் போய் வாங்குனே.
கெட்டிக்காரன்: அப்போ, உங்கிட்ட உள்ளது மட்டும் என்ன மேட் இன் ஜப்பானா?
ஏமாளி: இது நோக்கியாடா.
கெட்டிக்காரன்: ஆனா மேட் இன் சைனா தானே. சரி, உன்துல அப்படி என்னாத்த பெருசா இருக்குதுனு சொல்லு.
ஏமாளி: இட் ஹேஸ், ப்ளூடூத், மீடியா பிளேயர், 2.0 பிக்ஸல் கேமிரா, ஜிபிஆர்எஸ் அன்ட் இமெயில். இது ஸ்மார்ட் போனுடா மாப்ளே.
கெட்டிக்காரன்: நீ சொல்ற ப்ளூடூத், ஆரஞ்சுடூத் உட்பட எல்லா கர்மமும் இதுலேயும் இருக்குடா. அடிசனலா, ட்யோல் சிம் கார்டு போட்டுக்கலாம்டா மாப்ளே. (காட்டி கடுப்படிக்கிறான் கெட்டிக்காரன்).
ஏமாளி: டச் ஸ்க்ரீன்டா?
கெட்டிக்காரன்: தோ பாரு, இது தான் ஸ்டைலஸ். டச் ஸ்கீரினுக்கு. இத இப்படியே இழுத்தா, ஆன்டனா.
ஏமாளி: ஓ, எஃப்எம்க்கா?
கெட்டிக்காரன்: இல்லடா, டிவிக்கு. பத்து சேனல் தெரியுதுடா மாப்ளே.
ஏமாளி: டிவியாஆஆஆ (வயிறு ஃபயறாகிறது). கேமிரா குவாலிட்டி எப்படிடா?
கெட்டிக்காரன்: இருக்குற மாதிரி காட்டுதுடா மாப்ளே. நான் என்ன மணிரத்னம் படத்திற்கு ஸ்டில்ஸா எடுக்கப்போறேன். இட்ஸ் எனஃப்.
ஏமாளி: மச்சான், ஏதாவது சாங்ஸ் ப்ளே பண்ணு. (“டாக்ஸி…டாக்ஸி“ என்று அலறுகிறது கெட்டிக்காரனின் மொபைல்).
ஏமாளி: மச்சான், கொஞ்சம் காதுல குத்துதுலே.
கெட்டிக்காரன்: மாப்ளே, ஊர்ல அடுத்த திருவிழாவிற்கு என் மொபைல்ல இருந்தே ரிக்கார்டு போடலாம்டாவ். உன்து மாதிரி மனசுக்குள்ளேயே படிக்காது. ஹெட் போன் போட்டா உன்து மாதிரி ஓரளவிற்கு நல்லாயிருக்கும்டா.
ஏமாளி: பட், மச்சான். வாரண்ட்டி?! (ஒரு வித சிரிப்புடன்). அத்தோட சர்வீஸ்.
கெட்டிக்காரன்: மாப்ளே, வாரண்ட்டி வச்சு வாங்குனா மட்டும் என்ன பெருசா புடுங்கிட்டோம். தோ பாரு நம்ம சரண் புதுசா வாங்குன மொபைல் இரண்டு மாசத்துல டிஸ்ப்ளே பிராப்ளம் வந்து, இதுக்கெல்லாம் வாரண்ட்டி கிடையாதுன்னு கடைக்காரன் சொல்லி, செலவு வாங்குன காசுக்கு பாதிய கேட்டான். கடைசியா நம்ம பாய் கடையில தான் ரிப்பேர் பண்ணினான். இப்போ ஓடல. இது கழுத ஆறு மாசம் ஓடுனா போதும்டா, அடுத்தால பிரச்சனை வந்தா யூஸ் அன்ட் த்ரோ. இடைல பிரச்சனை வந்தா நம்ம பாய் கடை. வேறென்ன. மச்சான், அது மட்டுமில்ல, உன்து பதினஞ்சு ஆயிரம், இது வெறும் நாலாயிரம். உன்தோ, என்தோ யாரவது எடுத்தாலோ, தண்ணியில நனைஞ்சாலோ லாஸ்ட். ஆனா, நான் அடுத்ததா, நீ போட்ட காசுல இரண்டு மொபைல் வாங்கிடுவேன்.
ஏமாளி: யூஸர் எக்ஸ்பிரியன்ஸ் எப்படிடா மாப்ளே?
கெட்டிக்காரன்: மாப்ளே, இதோ பாரு, மீடியா பிளேயர்ல எலெக்ட்ரிக் ரிதமோட யூக்லைசர்ல்லாம் வருது. நீயே செக் பண்ணிட்டு சொல்லு.
(அதனுடைய யூஸர் எக்ஸ்ப்ரியன்ஸை பார்த்து எரிச்சலின் உச்சத்தில் ஏமாளி. கிடைத்த கேப்புல கடா வெட்டுறான் கெட்டிக்காரன், இப்படி)
கெட்டிக்காரன்:
What else you need? ஜிபிஎஸ் மட்டும் தான் இல்லை. மாப்ளே, கொடுத்த காசுக்கு இது போதும்டா. “என்டிடிவி
நியூஸ்” பாக்குறியா?
ஏமாளி: தேங்ஸ்டா மச்சான்.
நேரங்கெட்ட நேரத்தில் எமாளியின் ஸ்மார்ட் போன்
“தோஸ்த்து படா தோஸ்த்து“ என்று கண்ணடித்து கூவியது